நான் அமைச்சராவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது: ஜெய்ராம் ரமேஷ்

ஸ்டெர்லைட் ஆலைக்கு நான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்கும் முன்னரே அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

நான் அமைச்சராவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது: ஜெய்ராம் ரமேஷ்

முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

ஹைலைட்ஸ்

  • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராடி வருகின்றனர்
  • போராட்டத்துக்கு எதிராக போலீஸ் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலி
  • ஸ்டெர்லைட் ஆலை தற்சமயம் மூடப்பட்டுள்ளது
Kochi:

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு நான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்கும் முன்னரே அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

`மே 21 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு தான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நான் பதவியேற்றேன். ஸ்டெர்லைட் ஆலை, மூன்று வித அனுமதிகள் பெற்றன. மார்ச் 30, 2007, ஆகஸ்ட் 9, 2007 மற்றும் ஜனவரி 1, 2009 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. நான் அமைச்சராக பதவியேற்கும் முன்னரே இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன' என்று தன் தரப்பு கருத்து தெரிவித்துள்ளார் ஜெய்ராம்.

அவர் மேலும், `மார்ச் 10, 2010 மற்றும் ஆகஸ்ட் 11, 2010 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சரவை ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அப்போதே நான் உரிய பதிலை கூறியுள்ளேன். அப்போது, நான் கூறிய பதில் தவறாக இருந்திருந்தால் அப்போதே அமைச்சர்கள் என்னிடம் முறையிட்டிருப்பர். இதனால் தான் நான் இந்த விஷயம் குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வந்தேன். உண்மை இப்படி தெளிவாக இருக்கம் பட்சத்தில் எதற்குப் பேச வேண்டும் என்று நான் நினைத்தே இந்த முடிவை எடுத்திருந்தேன். ஆனால், இந்த உண்மைகளை எல்லாவற்றையும் மூடி மறைத்து என்னைப் பற்றி அவதூறு பரப்பியதால் தான் இப்போது பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்' என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

கடந்த மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தமிழக போலீஸ் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து ஜெய்ராம், `தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை வெருக்கத்தக்கவையாக இருக்கின்றது. இது மாநில அரசினி நடத்தையை மட்டுமல்ல, மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் உணர்த்துகின்றன. தங்கள் வாழ்வதாரத்துக்காக போராடும் மக்கள் மீது இந்த அரசுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. தொழில் தொடங்குவதை சுலபமாக்குவதால் நாம் சந்தித்துள்ள பிரச்னையின் வெளிப்பாடாகவே தூத்துக்குடி சம்பவம் இருக்கிறது.' என்று வேதனை தெரிவித்துள்ளார்.