வன பூங்காவில் மாயமான சிறுத்தை புலி, விலங்குகளை வேட்டையாடிய பரிதாபம்

காலை 7.20 மணிக்கு காணாமல் போன சிறுத்தை புலியை, காலை 8.15 மணிக்கு வனக்காவலர்கள் கண்டறிந்து, மயக்க மருந்து அளித்து கூண்டுக்குள் அடைத்தனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
வன பூங்காவில் மாயமான சிறுத்தை புலி, விலங்குகளை வேட்டையாடிய பரிதாபம்

நியூ ஆர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த வன பூங்காவில் மாயமான சிறுத்தை புலி, மற்ற விலங்குகளை வேட்டையாடியுள்ளது என வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வலேரியோ எனப் பெயர் கொண்ட மூன்று வயது சிறுத்தை புலி, அபுடான் வன பூங்காவில் மறைந்து போனது. தன் கூண்டில் இருந்து வெளியேறிய சிறுத்தை புலி, நான்கு அல்பகாஸ் பாலூட்டிகள், ஒரு ஈமு கோழி, ஒரு நரி ஆகியவற்றை வேட்டையாடியுள்ளது.

காலை 7.20 மணிக்கு காணாமல் போன சிறுத்தை புலியை, காலை 8.15 மணிக்கு வனக்காவலர்கள் கண்டறிந்து, மயக்க மருந்து அளித்து கூண்டுக்குள் அடைத்தனர் என வன பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் யாரும் தாக்கப்படவில்லை. எனினும், சிறுத்தை புலி கூண்டுக்குள் இருந்து எப்படி தப்பித்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக வன பூங்கா துணை தலைவர் கையில் பர்க்ஸ் தெரிவித்துள்ளார்.
 

சிறுத்தை புலி காணமல் போன சம்பவத்தால், கடந்த சனிக்கிழமை அன்று அபுடான் வன பூங்காவில், பொது மக்கள் பார்வைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் வன பூங்கா பணியாளரை, புலி தாக்கியது. இது போன்று விலங்குகள் தாக்கும் விபரீதங்கள் அதிக அளவில் நடைப்பெற்று வருகின்றன.

இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பின்படி, சிறுத்தை புலிகள் வேட்டையாடும் குணம் கொண்டது என தெரிவித்துள்ளது. 85 வகைக்கும் அதிகமான இனங்களை சிறுத்தை புலிகள் வேட்டையாடும். அமெரிக்காவில் ஆபத்தான விலங்குகள் பட்டியலில், சிறுத்தை புலி இடம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.

“100 வருட பழைமை வாய்ந்த வன பூங்காவில், இப்படி ஒரு அசம்பாவிதம் நடைப்பெற்றது வருத்தம் அளிக்கிறது. எனினும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று ரான் போர்மான், அபுடன் வன பூங்காவின் முன்னாள் துணை தலைவர் தெரிவித்தார்.(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................