பிரபல இளம் டிவி நடிகை மர்ம மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!

நடிகையின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலில் எந்தவொரு காயமும் காணப்படவில்லை.

பிரபல இளம் டிவி நடிகை மர்ம மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!

நடிகை ஜகீ ஜானின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டின் சமையலறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Thiruvananthapuram:

கேரளாவில் பிரபல இளம் டிவி நடிகையும், சமையற்கலை நிபுணருமான ஜகீ ஜான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் எந்தவொரு காயமும் காணப்படாதது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

நேற்று மாலை திருவனந்தபுரத்தின் குரவங்கோனத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஜகீயின் உடல் சமையில் அறையில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. 

அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே உயிரிழப்பு எப்படி நேர்ந்தது என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். 

சம்பவம் நடந்தபோது, ஜகீயின் தாயார் கிரேஸி, வீட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. மகளின் மரணத்தை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவரிடம் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. 

போலீசாரிடம் அழுதவாறே தனது மகள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார் என்று கிரேஸி கூறினார். 

ஜகீ உயிரிழந்ததை முதலில் அவரது தாயார் பார்க்கவில்லை. உறவினர் ஒருவர் அதனைப் பார்த்து, அதுகுறித்து இன்னொரு உறவினரிடம் தெரிவித்திருக்கிறார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

45 வயதாகும் ஜகீ தொழில் முறையில் சமையல்கலை நிபுணர் ஆவார். அவருக்கு டிவி நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகி, மாடல், ஊக்கப் பேச்சாளர், நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு முகங்கள் உண்டு. அவரது மரணம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)