''நான் இற‌க்கவில்லை, நான் உண்மையான நான் தான்'' வதந்திக்கு நைஜீரிய அதிபர் பதில்!

நைஜீரிய அதிபர் இற‌ந்துவிட்டார் என்றும், அவருக்கு பதிலாக சூடானை சேர்ந்த ஒருவரை மாற்றி க்ளோனிங்காக வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.

''நான் இற‌க்கவில்லை, நான் உண்மையான நான் தான்'' வதந்திக்கு நைஜீரிய அதிபர் பதில்!

''பலர் நான் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நம்புகின்றனர். அவை அனைத்தும் மறுக்கத்தக்கவை மற்றும் வதந்திகளே'' என்றார் அதிபர் புஹாரி

ABUJA:

நைஜீரிய அதிபர் புஹாரி தன் மீதான வதந்திகளை மறுத்துள்ளார். நைஜீரிய அதிபர் இற‌ந்துவிட்டார் என்றும், அவருக்கு பதிலாக சூடானை சேர்ந்த ஒருவரை மாற்றி க்ளோனிங்காக வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.

புஹாரி பிப்ரவரியில் மறு தேர்தலை அறிவித்துள்ளார். அவர் 5 மாதங்களாக வெளியில் கூறாத நோய்க்காக பிரிட்டனில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமூக வலைதளங்களிலும், எதிர்கட்சியினராலும் ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதில் சூடானை சேர்ந்த ஜுப்ரில் எனும் புஹாரியின் உருவமாதியை கொண்டு ஏமாற்றி வருகின்றனர். புஹாரி இற‌ந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ எல்லா இடங்களிலும் பரவி வருகிறது.

போலந்தில் நடந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற புஹாரி '' இது உண்மையான நான் தான். நானே சொல்கிறேன். நான் விரைவில் எனது 76வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறேன். மேலும் நான் வலிமையாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

''பலர் நான் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நம்புகின்றனர். அவை அனைத்தும் மறுக்கத்தக்கவை மற்றும் வதந்திகளே'' என்றார்

இந்த வதந்திகளுக்கு புஹாரி இமெயில் மூலம் தனது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ''நான் உண்மையான நான்தான்'' என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)