This Article is From Apr 03, 2019

ஐடி ரெய்டு! - விசாரணையில் உண்மை வெளிவரும்: ஜெயக்குமார்

ஐடி ரெய்டில் சிக்கிய பணம் யாருடையது என்பது விசாரணையில் உண்மை வெளிவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐடி ரெய்டு! - விசாரணையில் உண்மை வெளிவரும்: ஜெயக்குமார்

ஐடி ரெய்டில் சிக்கிய பணம் யாருடையது என்பது விசாரணையில் உண்மை வெளிவரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

கொடநாடு விவகாரத்தில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை ஆணை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும், அந்த நீதிமன்ற தீர்ப்பை மீறி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டங்களில் முதல்வர் மீது அவதூறு பரப்பி வருகிறார்.

ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில், எந்த ஒரு தனிநபர் குறித்தும் விமர்சனங்கள் கூடாது, அப்படி மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளோம் அவர்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

வருமான வரித்துறை சோதனைக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஐடி ரெய்டில் சிக்கிய பணம் யாருடையது என்பது விசாரணையில் வெளிவரும். துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது, அதன் தொடர்ச்சியாக அந்த தொகுதியிலே கோடிக்கணக்கான பணம் சிக்குகிறது. ஆனால் அது குறித்து திமுகவினர் எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை, மறுப்பும் தெரிவிக்கவில்லை.

எங்களுக்கும், அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்கிறார்களே தவிர உறுதியாக எந்த பதிலையும் கூறவில்லை. இது தொடர்பான விசாரணையில் உண்மை வெளிவரும். அதற்குள் எங்கோ, யார் வீட்டிலோ தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணத்திற்கு எங்கள் கட்சியை தொடர்புப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேர்தல் நடத்த வேண்டும் என்பதையும், நடத்த வேண்டாம் என்பதையும் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். அதிமுக முடிவு செய்யாது. நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் சேர்த்து வைத்தாலும் சரி, ஒரு மாதம் தள்ளி வைத்தாலும் சரி, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

.