இது தான் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா? வைகோவை விளாசிய தமிழிசை!

கடமையாற்ற வந்தவர்களை கண்ணியக்குறைவாக பேசுவதுதான் நீங்கள் கூறும் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா? என மிதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இது தான் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா? வைகோவை விளாசிய தமிழிசை!

முன்னதாக, நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மதிமுக தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கறுப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மதுரையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம், சாலை மறியல் நடத்தினர். இவை அனைத்தும் ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் என்ற எல்லையை தாண்டி நாட்டின் பிரதமரை தரக்குறைவாக ஏசியும், பேசியும் அங்கே கடமை ஆற்ற வந்த காவல்துறை அதிகாரிகளை தான் ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற கண்ணியம் இல்லாமல் வைகோ காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் அழைத்து எச்சரித்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

கடமையாற்ற வந்தவர்களை கண்ணியக்குறைவாக பேசுவதுதான் நீங்கள் கூறும் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா? கடந்த காலங்களில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்வதாக அடையாளப்படுத்திக்கொண்ட நீங்கள் இன்று அதே இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணைபோன திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறீர்கள். இதுதான் உங்களின் அடிக்கடி நிறமாறும் அரசியல் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

நீங்கள் நடத்திய கறுப்பு கொடி ஆர்ப்பாட்டமும் உங்களை விளம்பரப்படுத்தி கொள்ள யாருக்காகவோ ஒப்புக்காக நடத்தியதோ? அரசியலில் கடந்த காலங்களில் கள்ளத்தோணி நாடகம், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பது தான் கடந்தகால சாதனை விருதுகள். உங்களை நம்பிவந்து தீக்குளித்த தொண்டர்களின் ஆன்மா இன்று நீங்கள் எந்த ஸ்டாலினை எதிர்த்து வந்தீர்களோ அவரை முதல்வராக்குவேன் என்பதை கேட்டு அந்த ஆன்மா உங்களை மன்னிக்காது.

மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழக பாஜக பொறுத்துக் கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................