தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை மையம்

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை மையம்

புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சென்னையின் ஒரு சில இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. மீனம்பாக்கம், தரமணி, கிண்டி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோல் புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.கடந்த சில தினங்களால் காற்று மாசால் அச்சப்பட்டிருந்த மக்கள் தற்போது ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.

More News