This Article is From Apr 03, 2020

தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவில் மாற்றமா..?- முதல்வர் முக்கிய அறிவிப்பு!

144 தடை உத்தரவு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், அது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவில் மாற்றமா..?- முதல்வர் முக்கிய அறிவிப்பு!

144 தடை உத்தரவு, மாநிலம் முழுவதும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும்...

ஹைலைட்ஸ்

  • 24 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது
  • கொரோனா முன்னெச்சரிக்கையாக இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது
  • 144 உத்தரவைத் தொடர்ந்து மக்களிடம் உரையாற்றினார் எடப்பாடியார்

கோவிட்-19 என்று சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி, தமிழக அளவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர்.

144 தடை உத்தரவு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், அது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

144 தடை உத்தரவை அடுத்து, மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள், பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்ஸிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. காய்கறி, பால், மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்த தமிழக அரசு, பின்னர் கடை திறப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை விதித்தது. 

இப்படி 144 தடை உத்தரவு, மாநிலம் முழுவதும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், பலர் தொடர்ந்து வெளியில் சுற்றித் திரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் முதல்வர் பழனிசாமி, “மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்,” என்று தெரிவித்துள்ளார். 

.