ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் மவுனம் காட்டியதா திமுக? என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தொண்டர் பேசுவதை போல திமுக தலைமையும் பேச முடியுமா? மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அரசியல் கட்சி அந்த அளவுக்குத்தான் தலையிட முடியும். அதை சரியாக திமுக செய்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் மவுனம் காட்டியதா திமுக? என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அரசியல் கட்சி அந்த அளவுக்குத்தான் தலையிட முடியும்.


முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைதான போது திமுக மவுனம் காக்கவில்லை என்றும் அவ்வாறு செய்திகள் வெளியாவது உண்மைக்கு புறம்பானது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் தர மறுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து, நேற்று சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ தரப்பினர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். 

மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ கோரியது. தொடர்ந்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் சிபிஐ தரப்புக்கு எதிராக கடுமையாக வாதாடினார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.  

இதனிடையே, ப.சிதம்பரம் கைதை கண்டித்து தமிழத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்துகொள்ளவில்லை என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் கைதுக்கு பெரிய அளவில் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, ப.சிதம்பரம் கைதான போது திமுக மவுனம் காக்கவில்லை என்றும் அவ்வாறு செய்திகள் வெளியாவது உண்மைக்கு புறம்பானது.  

காங்கிரஸ் தொண்டர் பேசுவதை போல திமுக தலைமையும் பேச முடியுமா? மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அரசியல் கட்சி அந்த அளவுக்குத்தான் தலையிட முடியும். அதை சரியாக திமுக செய்துள்ளது. எங்களுடைய நட்பு ஒரு நேர்மையான நட்பு. அதனால், சந்தேகங்களுக்கும் இடம் வேண்டாம். 

சிதம்பரம் கைதைக் கண்டித்து, வெற்றிகரமாக போராட்டம் நடத்தியுள்ளோம். முன்பை விட கட்சியில் ஒற்றுமையும், எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. சிபிஐ ரெய்டுக்கு உட்பட்டு அதிமுகவினர் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிமுக அமைச்சர்களைப் போல, பொதுவாழ்க்கையில் தாழ்மையடைந்தவர்கள் வேறு யாரும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................