This Article is From Aug 05, 2019

'இரும்பு மனிதர் மோடி; இணை இரும்பு மனிதர் அமித் ஷா' : தமிழிசை பெருமிதம்!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திமுக எதிர்த்தும், அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.

'இரும்பு மனிதர் மோடி; இணை இரும்பு மனிதர் அமித் ஷா' : தமிழிசை பெருமிதம்!!

மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா நிறைவேறியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக் காட்டி நவீன இரும்பு மனிதர் மோடி என்றும், இணை இரும்பு மனிதர் அமித் ஷா என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திமுக எதிர்த்தும், அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. 

இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் இருப்பதற்கு அதற்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்துதான் முக்கிய காரணம் என்று கூறினார். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில் திருவண்ணாமலையில், காஷ்மீர் விவகாரத்தை குறிப்பிட்டு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அன்று சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் முழுவதுமாக நாட்டிலுள்ள மாகாணங்களை இணைத்தார். இன்று காஷ்மீர் என்ற மாகாணத்தை இந்தியாவோடு இணைத்து அதற்கான அதிகாரத்தை கொடுத்து நவீன இரும்பு மனிதரான பிரதமர் மோடி, அவருக்கு உறுதுணையாக இருக்கும் அமித் ஷாவும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளனர். 

இதனால் எதிராக இருக்கும் ஆம் ஆத்மி, மாயாவதி உள்ளிட்டோர் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். திமுகவையும் அண்ணன் வைகோவையும் தவிர. ஜனநாயக படுகொலை என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் இன்றைக்கு ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

கொள்கையில் மாறுபட்ட கட்சிகள் கூட மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளன. காஷ்மீரில் வளர்ச்சி இல்லை. இன்றைக்கு நாடு சமநிலையாகியுள்ளது. காஷ்மீர் மறுபடியும் சுற்றுலா பூமியாக மாறும் தருணம் வந்து விட்டது. 

இவ்வாறு அவர் கூறினார். 

.