“உனக்கு அங்க முத்தம் கொடுக்கணும்…”- கேப்டன் அமெரிக்காவுக்கு அயர்ன்-மேன் சொன்ன வாழ்த்து!

அவெஞ்சர்ஸ் படங்களில் தி ஹல்க் ஆக நடித்த மார்க் ரஃபலோவும், கிரிஸ் இவான்ஸுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
“உனக்கு அங்க முத்தம் கொடுக்கணும்…”- கேப்டன் அமெரிக்காவுக்கு அயர்ன்-மேன் சொன்ன வாழ்த்து!

அவெஞ்சர்ஸ் பட வரிசையில் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் அனைத்து வசூல் சாதனையையும் முறியடித்தப் படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்’


அவெஞ்சர்ஸ்… இந்தப் பெயரை யாரும் அவ்வளவும் சீக்கிரம் மறக்க முடியாது. அவெஞ்சர்ஸ் பட வரிசையில் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் அனைத்து வசூல் சாதனையையும் முறியடித்தப் படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்'. அவெஞ்சர்ஸ் வரிசைப் படம் முடிவடைந்ததில் பலருக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால், அந்தப் படத்தில் ‘அயர்ன்-மேன்' ஆக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் ‘கேப்டன் அமெரிக்கா'-வாக நடித்த கிரிஸ் இவான்ஸ் உள்ளிட்டோர் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். இந்த நட்பை ராபர்ட், ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ள விதம் ரசிகர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் கிரிஸ் இவான்ஸின், 38வது பிறந்தநாள் வந்தது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராபர்ட், “உங்களது சீக்-ல் (cheek) முத்தம் கொடுக்க வேண்டும்” என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுடன் ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படத்தில் கேப்டன் அமெரிக்கா வரும் ஒரு காட்சியை மீம் ஆக உருவாக்கி ட்வீட்டியிருந்தார். 

இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ் கொடுத்து வருகின்றனர். அவெஞ்சர்ஸ் படங்களில் தி ஹல்க் ஆக நடித்த மார்க் ரஃபலோவும், கிரிஸ் இவான்ஸுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................