ஈரான் ஜிம்மில் ‘மாம்பழமாம் மாம்பழம்’ பாட்டிற்கு ஆடியபடி வார்ம்-அப் : வைரல் வீடியோ

இவரின் ட்விட்டை பலரும் விரும்பி பகிர்ந்துள்ளனர். 1000 பேர் லைக் செய்துள்ளனர்.

ஈரான் ஜிம்மில் ‘மாம்பழமாம் மாம்பழம்’ பாட்டிற்கு ஆடியபடி வார்ம்-அப் : வைரல் வீடியோ

ஆனந்த் மகேந்திர இந்த பாடலை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் மிகவும் உத்வேகமாக செயல்படக்கூடியவர். வித்தியாசமான வீடியோக்கள் பலவற்றை பகிர்ந்து வந்துள்ளார்.  இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் ஈரான் நாட்டில் உள்ள ஜிம்மில் தமிழ் பாட்டிற்கு ஆடியபடி வார்ம் அப் செய்யும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். போக்கிரி படத்தில் ‘மாம்பழமாம் மாம்பழம்' என்ற பாட்டிற்கு ஜிம்மில் உள்ள அனைவரும் ஆடுகின்றனர். 

இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா “எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. நான் இதை எனது காலை வழக்கமாக மாற்றப்போகிறேன். சில தமிழ் பாடல்களை போட்டு கேட்டபடி புதிய காலை நேரத்தை தொடங்கவுள்ளேன்” என்று கூறியிருந்தார். 

இவரின் ட்விட்டை பலரும் விரும்பி பகிர்ந்துள்ளனர்.  1000 பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர். இந்த பாடலை விரும்பி கேட்டும் வருகின்றனர். 

Click for more trending news


More News