ஏசி வசதியுடன் 3+2 சீட்டுகள் கொண்ட பேருந்துகள் அறிமுகம்! - இன்று இலவசமாக பயணிக்கலாம்!

தமிழகத்தில் முதன்முறையாக ஏசி வசதியுடன் 3+2 சீட்டுகள் கொண்ட அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஏசி வசதியுடன் 3+2 சீட்டுகள் கொண்ட பேருந்துகள் அறிமுகம்! - இன்று இலவசமாக பயணிக்கலாம்!

சென்னை தலைமைசெயலகத்தில் ரூ.133 கோடி மதிப்பிலான 500 புதிய அரசு பேருந்துகளின் செயல்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் முதல் முறையாக 3+2 இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய 500 பேருந்துகளில், ஏசி வசதியுடன் 3+2 இருக்கை வசதி கொண்ட பேருந்துகளும் அடங்கும்.

இவை சென்னை முதல் திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளுக்கு இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இதுபோல் 3+2 பேருந்து அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதால், பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளான இன்று குளிர்சாதன வசதியுடைய பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................