கசோக்கி கொலை வழக்கில் அமெரிக்காவை எச்சரிக்கும் சவுதி!

சவுதி அமைச்சகம் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சவுதிக்கு எதிராக மரியாதைக்குறைவாக யாரையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளது.

கசோக்கி கொலை வழக்கில் அமெரிக்காவை எச்சரிக்கும் சவுதி!

அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் 49 ஜனநாயக கட்சியினரும், 7 குடியரசு கட்சியினரும் வாக்களித்தனர்.

Riyadh, Saudi Arabia:

சவுதி பத்திரிக்கையாளர் கசோக்கியின் மரணம் காரணமாக ஏமன் போரில் சவுதிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளும் என்ற அமெரிக்க செனட்டின் நிலைப்பாடை சவுதி அரேபியா கண்டித்துள்ளது.

"அமெரிக்க செனட்டிலிருந்து வரும் முறையற்ற குற்றச்சாட்டுகளையும், குறுக்கீடுகளையும் ஏற்க முடியாது" என சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் 49 ஜனநாயக கட்சியினரும், 7 குடியரசு கட்சியினரும் வாக்களித்தனர். இவர்கள் கசோக்கியின் மரணத்தை கண்டித்தும், அதற்கு பொறுபேற்க வேண்டியது முகமது பின் சல்மான் தான் என்று கூறியும் இந்த வாக்கினை அளித்துள்ளனர். 

சவுதி அமைச்சகம் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சவுதிக்கு எதிராக மரியாதைக்குறைவாக யாரையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க செனட் அமெரிக்க சவுதி உறவுகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா தனது செயல்களை உள்நாட்டு விவகாரங்களுக்குள் கொண்டு வரும் போக்கை கைவிட வேண்டும். அமெரிக்க - சவுதி உறவுகள் இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்று கூறியுள்ளது. 

இந்த விஷயம் ஜனவரிக்கு முன்பு அமெரிக்க சபையில் விவாதிக்கப்பட மாட்டாது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த கொலை, ரியாத்தின் மதிப்பை சர்வதேச அரங்கில் குறைத்துள்ளது. அமெரிக்கா, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் ச‌வுதி நாடுகள் மீது  பொருளாதார தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen to the latest songs, only on JioSaavn.com