This Article is From Dec 03, 2018

பசு மாட்டிறைச்சி விவகாரம் : போலீஸ் இன்ஸ்பெக்டரை கல்வீசிக் கொன்ற கும்பல்

உத்தர பிரதேசத்தில் 25 விலங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து போராட்டம் நடந்தது. இதில், கற்கள் வீசப்பட்டதால் வன்முறை வெடித்தது

கலவர கும்பலால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார்

Bulandshahr:

உத்தர பிரதேசத்தில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை கலவர கும்பல் ஒன்று கல்வீசிக் கொன்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியில் உள்ள புலந்த்சாகரில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு வெட்டிக் கொல்லப்பட்ட 25 பசு மாடுகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, போலீசாரை நோக்கி கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் உயிரிழந்தார். அவரது சடலம் போலீஸ் வாகனத்தின் வெளியே தொங்க விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து 2 நாட்களுக்கு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

u1v8l05s

சடலங்கள் அனைத்து பசுமாட்டின் உடையதுதானா என்பது உறுதியாகவில்லை.

 

j2fjnaf8

சம்பவம் நடந்த இடத்திற்கு அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இன்ஸ்பெக்டரின் டிரைவர் ஆஸ்ரே கூறுகையில், இரண்டாவது முறையாக சுபோத் குமார் மீது கலவர கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்பு நடந்த சம்பவத்தில் அவருக்கு காயம்தான் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றைக்கும் அவர் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியது. உயிர் பிழைக்க நான் தப்பித்து ஓடிவிட்டேன். நான் சென்ற பிறகு அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 400-க்கும் அதிகமான உள்ளூர்காரர்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர். அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் இன்ஸ்பெக்டர் தலையிலேயே கல் விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறப்பு அதிரடி படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

.