2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னர் காதலியை கரம்பிடித்தார் 'தி ராக்' டுவேன் ஜான்சன்!!

12 ஆண்டுகள் டேட்டிங்கிற்கு பிறகு காதலி லாரன் ஹாஷியானை டுவேன் ஜான்சன் திருமணம் முடித்திருக்கிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னர் காதலியை கரம்பிடித்தார் 'தி ராக்' டுவேன் ஜான்சன்!!

திருமண புகைப்படத்தை இன்ஸ்டாவில் டுவேன் வெளியிட லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளன.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. The Rock got married to his longterm girlfriend Lauren Hashian
  2. They got married in Hawaii
  3. The couple have two daughters - Jasmine and Tiana

12 ஆண்டுகள் டேட்டிங்கில் 2 குழந்தைகளுக்கு தந்தையான பின்ன காதலி லாரன் ஹாஷியானை டுவேன் ஜான்சன் திருமணம் முடித்துள்ளார். 
மல்யுத்த ரசிகர்களாக இருப்பவர்கள் தி ராக் என்ற பெயரை அறியாமல் இருக்க முடியாது. டுவேன் ஜான்சன் என்பதை நிஜப் பெயராகக் கொண்ட ராக்,WWE எனப்படும் மல்யுத்த போட்டியில் முன்னணி வீரராக இருந்தார். இதன் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ராக் பெற்றிருந்தார். 

ஒரு குறிப்பிட்ட பிரிவினரான மல்யுத்த ரசிகர்களுக்கு மட்டுமே அறிந்தவராக இருந்த டுவேன் ஜான்சன், ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்த பின்னர் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. 

அவருக்கும் டேனி ஹார்சியா என்பவருக்கும் இடையே முதலில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் 2007-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இருவருக்கும் சைமோன் என்ற 18 வயது மகள் உள்ளார். அவர் தற்போது அன்னையின் அரவணைப்பில் இருந்து வருகிறார். 
 

p0ea8vu8

இதற்கு முன்பாக பிரபல பாடகி லாரன் ஹாஷியானுக்கும், டுவேனுக்கும் இடையே 2006-ல் பழக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் மனைவியை அவர் விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. 
 

A post shared by Lauren Hashian (@laurenhashianofficial) on

இதன்பின்னர் ஹாஷியானுடன் டுவேன் டேட்டிங் செய்து வந்தார். இதில் இருவருக்கும் கடந்த டிசம்பர் 2015-ல் ஜாஸ்மின் என்ற பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவதாக 2015-ல் ஹாஷியான், டியானா என்ற இன்னொரு மகளை பெற்றெடுத்தார். இந்த உறவு திருமணம் செய்யாமல் நீடித்து வந்த நிலையில் டுவேன் - ஹாஷியான் ஜோடி திருமணம் முடித்துள்ளது. 

இருவரும் ஹவாய் தீவில் மணமுடித்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை டுவேன் தனது இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ்கள் லட்சங்களை தாண்டியுள்ளன. ஜோடியை வாழ்த்தி ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கமென்ட் செய்திருக்கின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................