எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு - க்யூட்டான உடையில் கலக்கிய எமி

வண்ண பலூன்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் நின்று எமி ஜாக்சன் போஸ் கொடுத்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு - க்யூட்டான உடையில் கலக்கிய எமி

எமி ஜாக்சன் பகிர்ந்த புகைப்படம் Image courtesy: iamamyjackson)


ஹைலைட்ஸ்

  1. எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு நடந்தது
  2. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்
  3. மார்ச் மாதத்தில் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார்.

நடிகை எமி ஜாக்சனுக்கு அவருடைய கணவர் ஜார்ஜ் பனாயோட்டா வளைகாப்பு நிகழ்வை நடத்தினார். அந்த விழாவின் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வளைகாப்பு நிகழ்வு கனவு போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எமி ஜாக்சன் நீல நிற உடையில் தாய்மைக்கே உடைய பூரிப்புடன் தோற்றமளித்தார். எனது ஆண் குழந்தையை நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த குடும்பத்தினருடன் கொண்டாடும் அழகான பிற்பகல்  என்று குறிப்பிட்டிருந்தார். 

தனது மகன் பல அற்புதமான பெண்களைக் தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி பையன்…நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக தெரிவித்திருந்தார். வண்ண பலூன்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் நின்று எமி ஜாக்சன் போஸ் கொடுத்தார். 

வளகாப்பில் எடுத்த புகைப்படங்களை க்ளிக் செய்து பார்க்கலாம்.

எமி ஜாக்சன் கர்ப்ப காலத்தை புகைப்பட டைரியாக வெளியிட்டு வருகிறார். கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றம், அந்த நேரங்களில் செய்யப்படும் உடற்பயிற்சி, சாப்பாட்டு முறை என பலவற்றை பற்றி பதிவுகள் தொடர்ந்து பதிந்து வருகிறார். 

தற்போது எமி ஜாக்சன் கர்ப்ப காலத்தின் 35வது வாரத்தில் உள்ளார். 

எமி ஜாக்சன் இறுதியாக தமிழில் நடித்த படம் 2.0சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................