This Article is From Jul 27, 2019

குஜராத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து டிக்டாக் வீடியோ : விசாரணை தொடங்கியது

கான்ஸ்டபிள் ஒருவர் குற்றவாளி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

குஜராத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து டிக்டாக் வீடியோ : விசாரணை தொடங்கியது

இந்த வீடியோ டிக்டாக்கில் மிகவும் வைரலாக பரவிவிட்டது.

Rajkot:

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டிக்டாக் வீடியோவை படமாக்க காவல்துறை கட்டுப்பாட்டு அறை (பி.சி.ஆர்) வேனை பயன்படுத்தியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜ்கோட் நகர துணை போலீஷ் கமிஷ்னர் ரவி மோகன் சைனி விசாரணைக்கு உத்தரவிட்டு இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை கோரியுள்ளார்.

“டிக்டாக் வீடியோவை எடுக்க பி.சி.ஆர் வேனை பயன்படுத்தி வீடியோ ஒன்று  எடுத்துள்ளனர். ஒரு நபர் பி.சி.ஆர் வேனின் பேனட்டை பயன்படுத்தியுள்ளது காண முடிந்தது. முதற்கட்ட விசாரணையில் ராஜ்கோட் காவல்துறையின் பிரிவுக்கு சொந்தமானது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது” என்று சைனி கூறினார். 

கான்ஸ்டபிள் ஒருவர் குற்றவாளி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடியோவை யார் பதிவு செய்தார்கள் என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. 

இந்த வீடியோ டிக்டாக்கில் மிகவும் வைரலாக பரவிவிட்டது. 

மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவல்துறை அதிகாரி கிராம பெண் போல் வேடமிட்டு டிக்டாக் வீடியோ ஒன்று எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.