அமேசான் இயக்குனராக பெப்ஸியின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி நியமனம்

இந்திரா நூயி சென்னையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பையும் பட்டப்படிப்பையும் சென்னையில்தான் அவர் நிறைவு செய்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமேசான் இயக்குனராக பெப்ஸியின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி நியமனம்

அமேசான் நிர்வாகத்தின் தணிக்கை கமிட்டியிலும் இந்திரா நூயி இடம்பெற்றுள்ளார்.


ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனத்தின் இயக்குனராக பெப்ஸியின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த அவர், இங்கு பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார்.

உலகப் பிரபலம் பெற்ற குளிர்பான நிறுவனமான பெப்ஸியின் தலைவர் பொறுப்பில் இந்திரா நூயி 2006 முதல் 2018 வரை இருந்தார். உலகின் சக்திமிக்க பெண்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். இதுதொடர்பாக ஏராளமான விருதுகள் அவருக்கு கிடைத்துள்ளன.

அமேசான் தனது நிர்வாக குழுவில் 2-வது பெண்ணாக நூயியை சமீபத்தில் சேர்த்துள்ளது. முன்னதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரோசாலிந்த்த ப்ரூவரை தனது இயக்குனராக அமேசான் நியமித்தது.

அமேசானை பொறுத்தவரையில் நிர்வாக குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நூயி, ப்ரூவர், ஜேமி கார்லிக், ஜூடித் மெக்ராத், பேட்ரிகா ஸ்டோன்ஸ்ஃபைர் ஆகிய 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................