ஜூன் மாதத்தில் சராசரியை விட 18 சதவீதம் கூடுதலாக பெய்த பருவமழை!!

ஓராண்டுக்கு முன்பு  எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 525 சதவீதம் அதிகரித்திருந்தது.  ஜூலை மாதத்திலும் வழக்கத்தை விட அதிகமான அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜூன் மாதத்தில் சராசரியை விட 18 சதவீதம் கூடுதலாக பெய்த பருவமழை!!

ஜூன் மாதத்தில் அரிசி,  காபி, ரப்பர்,  தேயிலை உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • ஜூன் மாதத்தில் சராசரியை விட 18 சதவீதம் அதிகப்படியான மழைப்பொழிவு
  • 2020 -ல் வழக்கத்தை விட மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என தகவல்
  • நாட்டில் பயிர்கள் உற்பத்தியும் கணிசமாக நடப்பாண்டில் அதிகரித்துள்ளது
Mumbai:

ஜூன் மாதத்தின்போது இந்தியாவில் சராசரியை விடவும் 18 சதவீதம கூடுதலாக பருவமழை பெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடப்பாண்டில் வழக்கத்தை விட 2 வாரம் முன்னதாக பருவமழை பெய்யத் தொடங்கியது.  இந்தியாவில் ஆண்டுதோறும் பெய்யும் மழையில் பருவமழைதான் 70 சதவீத  பங்கை வகிக்கிறது. 

கிராமப்புற  மக்களின் வாழ்வாதாரம்,  விவசாய தொழில்கள், கிராமப்புற பொருளாதார ஊக்குவிப்பு  உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பருவமழையை சார்ந்துதான் இருக்கிறது. 

இந்த நிலையில் வழக்கத்தை விட கூடுதலாக 18 சதவீதம் மழை பெய்திருப்பது  மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் சோயா பின்ஸ், பருப்பு வகைகள், பருத்தி உள்ளிட்டவை மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் நல்ல விளைச்சலை  அளித்திருப்பதாக தகவல்கள தெரிவிக்கின்றன. 

ஜூன் மாதத்தில் அரிசி,  காபி, ரப்பர்,  தேயிலை உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடக்கத்திலேயே மழைப்பொழிவு கணிசமாக  அதிகரித்திருப்பது நாட்டில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 26-ம் தேதி வரையில் மொத்தம் 31.56 ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் நடந்துள்ளது. இது  2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகம் ஆகும். 

பருத்தி உற்பத்தி 165 சதவீதமும் அரிசி உற்பத்தி 35 சதவீதமும் அதிகரித்துள்ளது.  

பருத்தி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா இருந்து  வருகிறது. பருவமழையால் கூடுதல் விளைச்சல் ஏற்பட்டிருப்பதன் மூலமாக உற்பத்தியில் இந்தியாவால் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும். 

ஓராண்டுக்கு முன்பு  எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 525 சதவீதம் அதிகரித்திருந்தது.  ஜூலை மாதத்திலும் வழக்கத்தை விட அதிகமான அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த மாதம், பருவமழை தொடர்பாக தகவல் தெரிவித்திருந்த இந்திய வானிலை  ஆய்வு மையம், 2020-ல் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கம் என்று தெரிவித்திருந்தது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)