This Article is From Dec 25, 2018

இந்தியாவிலேயே மிக நீளமான ரயில் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது : 10 Facts

அசாம் மாநிலத்தில் இரட்டை ரயில் பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் மேம்பாலம்தான் நாட்டிலேயே அதிக நீளம் கொண்டது.

அசாம் போகிபீல் ரயில் மேம்பாலத்தின் பட்ஜெட் சுமார் 5,900 கோடி ரூபாய்.

Guwahati:

இந்தியாவிலேயே மிக நீளமான ரயில் மேம்பாலமான அசாம் போகிபீல் பாலம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. பிரம்ம புத்திரா ஆற்றின் மேலே இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 3 மணிநேர கூடுதல் பயணம் தவிர்க்கப்படும்.

இந்தியாவின் நீளமான ரயில் மேம்பாலம் குறித்த 10 தகவல்கள்

1. அசாமின் போகிபீல் மேம்பாலம்தான் நாட்டிலேயே நீளமான ரயில் மேம்பாலம். இதன் நீளம் 4.9 கி மீட்டர்.

2. முதலில் கடந்த 1997-ம்போது இந்த பாலத்திற்கு அப்போதைய பிரதமர் எச்.டி. தேவகவுடா அடிக்கல் நாட்டினார்.

3. பாலத்தை அமைப்பதற்கு இதுவரை சுமார் 5,900 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

4. முதலில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்குத்தான் பாலம் அமைக்கப்பட இருந்தது. அப்போது பட்ஜெட் ரூ. 3,200 கோடி. பின்னர் தூரம் நீட்டிக்கப்பட்டதால் செலவு அதிகரித்திருக்கிறது.

5. தேவகவுடா அடிக்கல் நாட்டி வைத்தாலும் கடந்த 2002-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் பணிகள் நடைபெறத் தொடங்கின. இன்று வாஜ்பாயின் பிறந்த நாள் என்பதால் அவரை கவுரவம் செய்யும் வகையில் பாலம் திறக்கப்படுகிறது.

6. 30 லட்சம் சிமென்ட் மூட்டைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை வைத்து 41 ஒலிம்பிக் நீச்சல் குளம் கட்டி விடலாம்.

7. இந்த பாலத்தின் மூலம் பயண தூரம் 170 கிலோ மீட்டர் குறைந்து விடும்.

8. சீனாவுக்கு அருகாமையில் இருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கு இந்த பாலம் மிகவும் பயன்படும்.

9. சீனாவின் ஜெட் விமானங்கள், டாங்குகளை கண்காணிப்பதற்கு போகிபீல் ரயில் மேம்பாலம் உதவும்.

10. பிரம்ம புத்திரா ஆற்றில் வெள்ளம் வந்ததால் அடிக்கடி இந்த ரயில் மேம்பாலத்தின் பணிகள் தடை பட்டன.

.