இந்தியாவில் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் செயல்பட தொடங்கியது! யார் தானம் செய்யலாம்?

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வரைஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மாவைப் பெறுவதில் மக்கள் பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் செயல்பட தொடங்கியது! யார் தானம் செய்யலாம்?

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வரைஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மாவைப் பெறுவதில் மக்கள் பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் செயல்பட தொடங்கியது!
  • தானமாக அளிக்காவிட்டால், மற்றவர்கள் எப்படி இதனை பெற முடியும்
  • பிளாஸ்மாவை தானம் செய்ய மேலும் பலர் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.
New Delhi:

இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தானம் செய்ய முடிந்த அனைவரும் முன்வந்து மற்றவர்களுக்கு உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காணொளி காட்சி மூலம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வரைஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மாவைப் பெறுவதில் மக்கள் பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இப்போது கொஞ்சம் கஷ்டம் நீங்கும் என்று நான் நினைக்கிறேன். 

அதேபோல், பிளாஸ்மாவை தானம் செய்ய மேலும் பலர் முன்வருவார்கள் என்று நம்புகிறேன். இதனை தானமாக அளிக்காவிட்டால், மற்றவர்கள் எப்படி இதனை பெற முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். 

இதைத்தொடர்ந்து, யார் பிளாஸ்மா தானம் அளிக்க தகுதியுடையவர்கள் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார். அதில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, மீண்டு முழுமையாக 14 நாட்கள் அறிகுறி இல்லாமல் இருந்தால், நீங்கள் பிளாஸ்மை தானம் செய்யலாம் என்று அவர் கூறினார். 

18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 50 கிலோவிற்கு குறையாமல் எடைகொண்டவர்கள் தானம் செய்யலாம்.


அதேபோல், ஒரு நபர் நீரிழிவு நோய் உள்ளவர்கள், புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் உள்ளிட்டோர் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியற்றவர்கள். தானம் செய்ய முன்வருபவரின் ரத்த அழுத்தம் 140க்கும் அதிகமானதாகவும், டயஸடாலிக் 60க்கும் குறைவாகவோ அல்லது 90க்கும் அதிகமானதாகவோ இருந்தால் அவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய முடியும். 

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அல்லது நீண்டகால சிறுநீரக, இதயம், நுரையீரல், கல்லீரல் நோய் இருந்தால் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது என்றும், கர்ப்பிணி பெண்களும் தானம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவோர் டெல்லி அரசு அதிகாரிகளை 1031 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது வாட்ஸ்அப் எண் - 8800007722 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

"நீங்கள் பதிவுசெய்ததும், பிளாஸ்மா தானம் செய்ய நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்த ஒரு மருத்துவர் உங்களை அழைப்பார். பிளாஸ்மாவை தானம் செய்ய 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை ஆகும். ரத்த தானம் பலவீனத்தை ஏற்படுத்தும், பிளாஸ்மா தானம் அப்படி இல்லை. அரிதாக இதுபோன்று மற்றவர்களுக்கு சேவை செய்ய நாம் வாய்ப்பை பெறுகிறோம் "என்று அவர் கூறினார்.