This Article is From Aug 16, 2018

சுதந்திர நாளில் பிறந்த இந்தியாவின் முதல் பெங்குயின்!

மும்பையில் இருக்கும் உயிரியல் பூங்காவில் இந்தியாவின் முதல் பெங்குயின் பிறந்துள்ளது.

சுதந்திர நாளில் பிறந்த இந்தியாவின் முதல் பெங்குயின்!
Mumbai:

மும்பையில் இருக்கும் உயிரியல் பூங்காவில் இந்தியாவின் முதல் பெங்குயின் பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சிகரமான சம்பவம் குறித்து மும்பை உயிரியல் பூங்காவின் இயக்குநர் சஞ்சய் திருப்பதி, ‘ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இரவு 8:02 மணிக்கு, முட்டையிலிருந்து வெளியே வந்தது ஹம்போல்ட் பெங்குயின். அது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. அதன் தாயான ஃப்லிப்பரும் அதற்கு பாலூட்டியது’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மும்பை உயிரியல் பூங்காவிலிருந்த பெங்குயின்களான மோல்ட் மற்றும் ஃப்லிப்பர் ஆகியவை ஒன்றிணைந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் ஃப்லிப்பர் முட்டையிட்டது.

இதில் ஆண் பெங்குயினான மோல்ட், பெண் பெங்குயினான ஃப்லிப்பரைவிட வயதில் குறைவனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை உயிரியல் பூங்காவின் பெங்குயின் காலனியில் இந்த இரு மிருகங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஃப்லிப்பர் முட்டையிட்ட பின்னர், கடந்த 40 நாட்களாக உயிரியல் பூங்கா ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அதை கவனமாக பார்த்து வந்தனர். இந்நிலையில், அந்த முட்டையிலிருந்து பெங்குயின் வந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெங்குயின் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட அறையில் வைத்து பரமாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூலை 16 ஆம் தேதி, தென் கொரியாவிலிருந்து மும்பை உயிரியல் பூங்காவிற்கு டோரி, டோனல்டு, டெய்சி, பப்பாய், ஆலிவ், பப்பிள், ஃப்லிப்பர் மற்றும் மோல்ட் ஆகிய பெங்குயின்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் டோரி என்கின்ற பெண் பெங்குயின் மட்டும் பாக்டீரியா தொற்று காரணமாக அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி இறந்தது குறிப்பிடத்தக்கது.

.