சிட்னியில் பயங்கரம்! - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சூட்கேஸில் சடலமாக மீட்பு!

கிழக்கு சிட்னி சாலையில் உள்ள பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்து ப்ரீத்தி ரெட்டியின் காரில் ஒரு சூட்கேஸில் அவரது உடல் அடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நீயூ செவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிட்னியில் பயங்கரம்! - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சூட்கேஸில் சடலமாக மீட்பு!

ஆஸ்திரேலியாவில் கடைசியாக ஞாயிறன்று மெக்டொனால்டு அருகே ப்ரீத்தி காத்திருந்துள்ளார்.


Melbourne: 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பல் மருத்துவரான ப்ரீத்தி ரெட்டி (32). இவர் கடந்த ஞாயிறன்று காணாமல் போன நிலையில், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிழக்கு சிட்னி சாலையில் உள்ள பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்து ப்ரீத்தி ரெட்டியின் காரில் ஒரு சூட்கேஸில் அவரது உடல் அடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நீயூ செவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அவரது முன்னாள் காதலனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். எனவே இந்த சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்காலம் என போலீசார் கூறுகின்றனர்.

கடந்த ஞாயிறன்று காலை பல்மருத்துவ மாநாட்டில் பங்கேற்க ப்ரீத்தி சென்றுள்ளார். அதன் பின் 11மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசி ப்ரீத்தி காலை உணவை முடித்து வீட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, ப்ரீத்தி மாயமானதாக அவரது குடும்பத்தினர் நீயூ சவுத் வேல்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கடைசியாக ஞாயிறன்று ப்ரீத்தி ரெட்டி, ஜார்ஜ் சாலையில் உள்ள மெக்டொனால்ஸ் உணவகத்தில் காத்திருந்துள்ளார் என்பது அங்கிருந்து சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார். 

இதுகுறித்து ப்ரீத்தியுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் போலீசாரிடம் கூறும்போது, ப்ரீத்தி காணாமல் போன முதல் எங்களுக்கு மிகவும் பதட்டமாக இருக்கிறது. எங்கள் யாராலும் தூங்க முடியவில்லை, கடைசியாக ப்ரீத்தியிடம் கடந்த வியாழனன்று பேசினோம். அவர் வழக்கம்போல் தான் பேசினார். அடுத்த வாரம் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார் என அவர்கள் கூறியுள்ளனர். 

இதைத்தொடர்ந்தும், பிரீத்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரைண மேற்கொண்டுள்ளனர். எனினும், ப்ரீத்தி கிடைக்கவில்லை. 

இந்நிலையில், செவ்வாயன்று கிங்ஸ்ஃபோர்ட்டில் உள்ள ஸ்ட்ராசான் லேனில், ப்ரீத்தி கார் பார்கிங் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது, அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, காரின் உள்ளே இருந்த சூட்கேஸில் ப்ரீத்தியின் உடல் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிட்னி மார்கெட் சாலையில் உள்ள ஹோட்டலில் ப்ரீத்தி அவரது முன்னாள் காதலனுடன் தங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ப்ரீத்தியின் உடலில் பல முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதகாவும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................