This Article is From Jun 22, 2018

அமெரிக்காவில் பெற்றோரை பிரிந்து வாடும் இந்தியக் குழந்தைகள்

முகாம்களுக்கு தொடர்பு கொண்ட இந்திய தூதரகம், பெரும்பாலும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்

அமெரிக்காவில் பெற்றோரை பிரிந்து வாடும் இந்தியக் குழந்தைகள்

ஹைலைட்ஸ்

  • 100 இந்தியர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் சிறைவைக்கப்பட்டுள்ளனர்
  • நியூ மெக்ஸிக்கோ மற்றும் ஓரிகானில் வைக்கப்பட்டுள்ளனர்
  • பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்
New Delhi: அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக, அத்துமீறி நுழைய முயன்ற இந்தியர்களின் குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து பிரித்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு தொடர்பு கொண்ட இந்திய தூதரகம், 100 இந்தியர்கள், பெரும்பாலும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

52 இந்தியர்கள் ஓரிகானிலும், 40 முதல் 45 இந்தியர்கள் நியூ மெக்ஸிக்கோ முகாம்களிலும் அடைத்து வைக்கப்படிட்ருக்கின்றனர். அகதிகளாக வரும் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்கும் "ஜீரோ டாலெரென்ஸ்" கொள்கை உலகளவில், எதிர்ப்பை சந்தித்து வரும் நேரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து இந்திய தூதரகத்தின் அறிக்கையில் “முகாம்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தூதரக அதிகாரி ஒருவர் ஓரிகன் முகாமுக்கு நேரில் சென்றுள்ளார். அடுத்ததாக நியூ மெக்ஸிக்கோ முகாமுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்கிறது.

100 நாட்களுக்கும் மேலாக இந்தியர்கள் நியூ மெக்ஸிக்கோவில் வைக்கப்பட்டிருந்தனர். அதன் பின் ஓரிகான் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அந்த முகாம்களின் நிலைமையும் படுமோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகாம்களில் உள்ள இந்தியர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அத்துமீறி நுழைய முற்படுவதால், அவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட கோப்புகளை அழித்து விடுவதால், அவர்கள் இந்தியர்கள் தானா என்பதை உறுதி செய்வது சவாலாக இருப்பதாக தூதரக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.