This Article is From Mar 20, 2019

குறைந்த செலவில் வாழ ஏற்ற சிட்டிஸ்: பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய நகரங்கள்!

150 பொருட்களின் விலையை 133 நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த சர்வேவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

குறைந்த செலவில் வாழ ஏற்ற சிட்டிஸ்: பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய நகரங்கள்!

இந்த ஆய்வில், பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களில்தான் மக்கள் வாழ்வதற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

New York:

மிகவும் குறைந்த செலவில் வாழ ஏற்ற நகரங்கள் குறித்து ‘எக்கனாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யூனிட்ஸ் 2019 உலக அளவில் வாழ ஆகும் செலவு' என்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த சர்வேவின் முடிவில் சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. 

இந்த ஆய்வில், பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களில்தான் மக்கள் வாழ்வதற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நகரங்கள், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 

அதேபோல உலகின் மிகவும் குறைவான செலவில் வாழ ஏற்ற நகரங்கள் பட்டியலில் வெனிசுலாவின் காரகஸ், சிரியாவின் டமாஸ்கஸ், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட், கஜகஸ்தானின் அல்மடி, பாகிஸ்தானின் கராச்சி, நைஜிரியாவின் லகோஸ் மற்றும் அர்ஜென்டினாவில் பியூனோ ஏர்ஸ் ஆகியவை முதல் 7 இடங்களைப் பிடித்துள்ளன. அதைத் தொடர்ந்து இந்தியாவின் பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 

150 பொருட்களின் விலையை 133 நாடுகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த சர்வேவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

.