This Article is From Mar 01, 2019

வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார் அபினந்தன்! LiveUpdates

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை (IAF Wing Commander Abhinandan Varthaman) இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்

வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார் அபினந்தன்! LiveUpdates

கமாண்டர் அபினந்தன் (Abhinandan Varthaman), ரெட் க்ராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவில்லை. 

New Delhi:

India-Pakistan Tension Live Updates: பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அமைதியை வலியுறுத்தும் நோக்கில் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் வாகா எல்லையில் அபினந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்துள்ளார். அதே நேத்தில் கமாண்டர் அபினந்தன், ரெட் க்ராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவில்லை. 

புதன் கிழமை காலை இந்திய - பாகிஸ்தானுக்கு இடையில் விமானத் தாக்குதல் நடைபெற்றபோது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் பிடித்து, தங்களது பிடியில் வைத்துள்ளது. 

விங் கமாண்டர் அபினந்தன் விடுவிப்பு குறித்தான லைவ் அப்டேட்ஸ்:

Mar 01, 2019 21:20 (IST)

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Mar 01, 2019 21:11 (IST)

இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மாலை 5 மணி அளவில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவித்த பாகிஸ்தான், இரண்டு முறை நேரத்தை மாற்றியுள்ளது.
Mar 01, 2019 18:20 (IST)
விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனின் போர் விமானம், பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் விபத்துக்குள்ளான உடன், பாராஷூட் மூலம் வெளியே குதித்தார். சாதுர்யமாக அருகிலிருந்த குட்டையில் விழுந்த அபினந்தன், தன்னிடமிருந்து ஆவணங்களை கடித்து விழுங்கினார்.
Mar 01, 2019 16:09 (IST)
இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டாவது குழு வாகா-அட்டாரி எல்லையை அடைந்தது
Mar 01, 2019 16:08 (IST)
#WelcomeHomeAbhinandan இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது
Mar 01, 2019 15:18 (IST)
தமிழகத்திலிருந்து விமானப்படையில் உள்ள விங் கமாண்டர் அபினந்தன் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறான்: பிரதமர் மோடி பேச்சு!
Mar 01, 2019 14:50 (IST)
ஏர் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன் இன்று மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட வாய்ப்பு எனத் தகவல்.
Mar 01, 2019 14:49 (IST)
வாகா- அட்டாரியில் கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று ரத்து!
Mar 01, 2019 13:39 (IST)
தீவிரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும்: சுஷ்மா பேச்சு
Mar 01, 2019 13:38 (IST)
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது மதத்துக்கு எதிரான போர் அல்ல. உலகில் இருக்கும் எல்லா மதங்களும் அமைதியையும் அன்பையும் போதிக்கின்றன: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பேச்சு
Mar 01, 2019 13:00 (IST)
வாகா எல்லைக்கு மதியம் 12 மணி அளவில் வந்தனர் விமானப்படை அதிகாரிகள்!
Mar 01, 2019 12:55 (IST)
அபினந்தனை தாயகம் அழைத்து வர இந்தியா, விமானப்படை விமானத்தை அனுப்ப திட்டமிட்டது. அதற்கு பாகிஸ்தன் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்!
Mar 01, 2019 12:52 (IST)
அபுதாபியில் சுஷ்மா உரை:
அபுதாபியில் ஓ.ஐ.சி-யின் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை சுஷ்மா சுவரா உரையாற்ற உள்ளார். உரையின் போது, பாகிஸ்தான் விவகாரம் குறித்து அவர் பேசுவார என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mar 01, 2019 12:52 (IST)
விங் கமாண்டர் அபினந்தன் வருவதையொட்டி, சென்னை காளிகாம்பால் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
.