முப்படைகளுக்கும் ஒரே தளபதி : பிரதமர் மோடி அறிவிப்பு

2019 Independence Day: பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இராணுவ ஆலோசகராக பாதுகாப்பு தளபதி இருப்பார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
முப்படைகளுக்கும் ஒரே தளபதி : பிரதமர் மோடி அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் இந்த கருத்ததை வலுவாக ஆதரித்தார்.


New Delhi: 

பிரதமர் நரேந்திர மோடி தனது 73வது சுதந்திர தினத்தில் இந்தியாவை உரையாற்றும்போது ஒரு முக்கிய அறிவிப்பில் பாதுகாப்பு படைத் தலைவர் ஒருவர் மூன்று சேவைகளின் தலைவராக இருப்பார் என்று தெரிவித்தார்.

“எங்கள் படைகள் இந்தியாவின் பெருமை. படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் செழிமை படுத்த செங்க்கோட்டையிலிருந்து முக்கிய முடிவை அறிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு பாதுகாப்புத் தளபதி இருப்பார். இது படைகளை இன்னும் திறம்பட செயல்பவைக்கப் போகிறது” பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து தனது 93 நிமிட உரையில் கூறினார்.

ராணுவத்தை மேற்பார்வையிட ஒரு பாதுகாப்புத் தளபதி முதன்முதலில் 1999 கார்கில் போருக்குப்பின்னர் அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டார். கார்கில் போருக்குப் பிறகு பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளை ஆராய இந்த குழு அமைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இராணுவ ஆலோசகராக பாதுகாப்பு தளபதி இருப்பார்.

 பிரதமர் மோடியின் முதல் பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் இந்த கருத்ததை வலுவாக ஆதரித்தார்.

பல ஆண்டுகளாக இந்த பரிந்துரை முன்னேறவில்லை. ஏனெனில் ஆயுதப்படைகளின் சில பிரிவுகளிலிருது அதிகாரத்துவத்திலிருந்தும் ஆட்சேபணைகள் எழுந்தன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................