This Article is From Sep 02, 2019

பாக்.-ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷனை இந்திய அதிகாரிகள் இன்று சந்திக்கின்றனர்!

மத்திய அரசின் ராஜதந்திர (Diplomatic) நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக குல்பூஷன் ஜாதவ் விவகாரம் பார்க்கப்படுகிறது.

பாக்.-ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷனை இந்திய அதிகாரிகள் இன்று சந்திக்கின்றனர்!

2017 ஏப்ரல் 9-ம்தேதி குல்பூஷனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

New Delhi:

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அவரை இன்று சந்தித்து பேசுகின்றனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில், சர்வதேச நீதிமன்றம் மற்றும் பாகிஸ்தானின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்திய அதிகாரிகள் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குல்பூஷனை இந்தியா தரப்பில் வெளியுறவு மூத்த அதிகாரி கவுரவ் அலுவாலியா இன்று சந்தித்து பேசுகிறார். குல்பூஷனை சந்தித்து பேச ஏதுவான சூழலை பாகிஸ்தான் அமைத்து தரும் என்று நம்புவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தான் அரசு குல்பூஷன் ஜாதவை கைது செய்து வைத்திருந்தது. அவருக்கு கடந்த 2017 ஏப்ரலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியாக குல்பூஷனின் மரண தண்டனை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரை மீட்டு இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

.