This Article is From Apr 10, 2020

ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்த சீனா… குட்டுவைத்த இந்தியா!

"ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து சீனாவுக்கு நன்றாகத் தெரியும்"

ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்த சீனா… குட்டுவைத்த இந்தியா!

"ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. தொடர்ந்து அப்படியே இருக்கும்"

ஹைலைட்ஸ்

  • ஐ.நா சபைக்கு ஜம்மூ காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது சீனா
  • சீனா அறிக்கை மூலம் ஜ.நா சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளது
  • சீனாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பதிலடி
New Delhi:

ஜம்மூ காஷ்மீர் விவகாரம் பற்றி சீன அரசு தரப்பு, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறது. தற்போது மீண்டும் ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் துடுக்குத்தனமாக சீனா சொல்லிய கருத்துக்கு இந்திய அரசு தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபைக்குச் சீனாவின் நிரந்தர மிஷன் பிரிவின் செய்தித் தொடர்பாளர், ஐ.நா சபைக்கு அறிக்கை மூலம் ஜம்மூ காஷ்மீர் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, “ஐக்கிய நாடுகள் சபைக்குச் சீனாவின் நிரந்தர மிஷன் பிரிவின் செய்தித் தொடர்பாளர், ஐ.நா சபைக்கு அறிக்கை மூலம் ஜம்மூ காஷ்மீர் குறித்து குறிப்பிட்டுள்ளதை நாங்கள் மறுக்கிறோம்.

ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து சீனாவுக்கு நன்றாகத் தெரியும். ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. தொடர்ந்து அப்படியே இருக்கும். ஜம்மூ காஷ்மீர் தொடர்பான அனைத்து விவகாரங்களும் இந்தியாவின் உள்நாட்டு விஷயத்திற்குள் வரும்.

இந்த காரணத்தினால் சீனா உட்பட மற்ற நாடுகள், இந்தியாவின் உள்விவகாரங்கள் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் இறையாண்மையையும் மாண்பையும் மற்ற நாடுகள் மதித்து நடந்து கொள்ள வேண்டும்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 


 

.