ரூ. 15 லட்சத்திற்கு வாடகை வீட்டில் இருந்த அதிகாரி! சேவை போதுமென திரும்ப அழைத்த மத்திய அரசு!

வெளியுறவுத்துறையில் பணியாற்றிய இந்திய அதிகாரி, VAT வரி திரும்ப பெறுதலில் மோசடி செய்ததாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பல இடங்களில் அளித்திருந்ததகாவும் விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரூ. 15 லட்சத்திற்கு வாடகை வீட்டில் இருந்த அதிகாரி! சேவை போதுமென திரும்ப அழைத்த மத்திய அரசு!

ஆஸ்திரியாவில் பணியில் இருந்த ரேணு பால், இந்தியா திரும்பியுள்ளார்.

New Delhi:

ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதர் ரேணு பால், அங்கு ரூ. 15 லட்சம் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கி வந்துள்ளார். அவர், அரசின் நிதியை முறைகேடாகவும், தவறாகவும் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர் இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார். 

இந்த நடவடிக்கையை மத்தியவெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. ரேணு பால் 1988-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியாவார். ஆஸ்திரியாவில் அவருடைய பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுவதாக இருந்தது. 

அவர் மீது எழுந்த புகாரின்பேரில், மத்திய கண்காணிப்பு குழுவான CVC மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை விசாரணையை மேற்கொண்டது. இதில் அவர், வீட்டு வாடகைக்காக மட்டும் மத்திய அரசின் அனுமதியின்றி கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தது தெரிய வந்தது. 

வெளியுறவுத்துறையில் பணியாற்றிய இந்திய அதிகாரி, VAT வரி திரும்ப பெறுதலில் மோசடி செய்ததாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பல இடங்களில் அளித்திருந்ததகாவும் விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தின்போது ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு வெளியுறவ அமைச்சகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி தலைமையில் குழு ஒன்று சென்றது. அவர்கள்தான் ரேணு பாலிடம் விசாரணை நடத்தினர். தற்போது, விசாரணைக்குழு தரப்பிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் விதிகளை மீறி நிதி மோசடி, நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ரேணு பால் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ரேணு பால் கடந்த 9-ம்தேதி டெல்லிக்கு திரும்புமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், நிர்வாக ரீதியிலும், நிதி தொடர்பாகவும் எந்தவொரு உத்தரவை பிறப்பிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, ரேணு பால் ஞாயிறன்று இந்தியா திரும்பியுள்ளார்.