ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான வேலைவாய்ப்பு...! இந்தியா போஸ்ட் அறிவிப்பு

பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 15

ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான வேலைவாய்ப்பு...! இந்தியா போஸ்ட் அறிவிப்பு

India Post GDS Recruitment 2019: வேலைக்கு பதிவு செய்பவர்கள் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

New Delhi:

இந்திய தபால் துறை தமிழ்நாடு மற்றும் ஒடிஸா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை செய்துள்ளது. கிராம தக் சேவா கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. வயது 18-40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு பதிவு செய்யலாம். வேலைக்கு பதிவு செய்பவர்கள் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 15

இணையத்தில் பதிவு செய்யலாம். 

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஸ்கூட்டர்  அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம். வேலைக்கு பதிவுசெய்ய விரும்புகிறவர்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொள்வது அவசியம். 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதிக வயதுள்ள நபர்கள் மெரிட் அடிப்படையில் பணியமர்த்தப்படலாம். (வயது மெரிட்டுக்கான தகுதி)