This Article is From Dec 15, 2018

''பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு கவனமாக உள்ளது''- மல்லையா

ரூ. 9,000 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் விஜய் மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளார்.

London:

வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்று விட்டு அதனை திரும்பி அளிக்காமல் விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.

இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் என்.டி.டீ.வி.க்கு அளித்த பேட்டியில் மல்லையா கூறியிருப்பதாவது-
இந்தியா வருவதுற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.

நான் 2016-லேயே பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு மல்லையா கூறியுள்ளார்.

.