ஜூன் 25, 2020 இன் செயற்கைக்கோள் படங்கள் கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள சீனக் கரையில் கருப்பு கூடாரங்களை காட்டுகின்றன.
ஹைலைட்ஸ்
- லெப்டினன்ட் ஜெனரல் பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் பின்வாங்க சம்மதித்து
- புதிய செயற்கைக்கோள் படங்கள் கால்வான் ஆற்றின் கரையில் கருப்பு கூடாரங்களை க
- சீன இராணுவத்தின் 16 முகாம்கள் இருப்பதையும் அவை காட்டுகின்றன
New Delhi: லடாக் கிழக்கு பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஜூன் 22 அன்று இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்தியாவும் சீனாவும் லடாக்கில் உள்ள அனைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளிலும் பரஸ்பரம் பின்வாங்க ஒப்புக் கொண்டன.
ஜூன் 22 முதல் 2020 ஜூன் 25 வரை கால்வான் நதி-வளைவில் சீன நிலையில் காணக்கூடிய மாற்றங்கள்.
ஆனால் தற்போது, கால்வான் பள்ளத்தாக்கின் புதிய செயற்கைக்கோள் படங்கள் கால்வான் ஆற்றின் கரையில் கருப்பு கூடாரங்களை காட்டுகின்றன. இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டு (எல்.ஏ.சி) பகுதிக்கு அருகே உள்ளது. இப்பகுதியில் 9 கிலோமீட்டருக்குள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஏறத்தாழ 16 முகாம்கள் இருப்பதையும் அவை காட்டுகின்றன.
பிளானட் ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட புதிய படங்கள் ஜூன் 25 மற்றும் ஜூன் 26 தேதியிட்டவை. இப்படங்களில் கால்வான் ஆற்றின் குறுக்கே இந்தியப் படைகளால் கட்டப்பட்ட கல் சுவர் ஒன்று சேதமடைந்திருப்பதை காண முடிகின்றது. மேலும், இந்தப்படங்களில் இந்திய ராணுவ முகாம்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
கால்வான் பள்ளத்தாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 9 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ள 16 சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) முகாம்கள்.
கால்வான் பிராந்தியத்தில் கட்டுமான நடவடிக்கைகளைக் காட்டும் சமீபத்திய படங்கள் குறித்து என்.டி.டி.வி பல மணி நேரங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தை அணுகியது. அவர்கள் இதற்கு பதிலளித்தால் இது குறித்த சரியான விளக்கம் கிடைக்கப்பெறும். இந்தியாவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய கட்டுமான பணிகள் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இந்திய சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் அருகில் சீன ராணுவத்தின் புல்டோசர்கள் கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதையும், ஆற்றின் போக்கினை மாற்றுவதையும் முந்தைய படங்கள் தெளிவாக விளக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.