பாலியல் வன்புணர்வு வழக்கில் கேரளா சிபிஎம் அலுவலகத்தில் இளைஞர் கைது

Palakkad, Kerala: 29 வயது இளைஞர் சிபிஎம் ஏரியா கமிட்டி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

பாலியல் வன்புணர்வு வழக்கில் கேரளா சிபிஎம் அலுவலகத்தில் இளைஞர் கைது

Palakkad, Kerala:14 நாள் நீதிமன்ற காவலில் வைத்திருக்கும் படி கோர்ட் உத்தரவிட்டது. (Representational)

Palakkad, Kerala:

கேரளாவில் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 29 வயது இளைஞர் சிபிஎம் ஏரியா கமிட்டி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று பாலக்காடு மாவட்ட சிறுபுலசேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட பிரகாசன் சனி இரவு  உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்திருக்கும் படி கோர்ட் உத்தரவிட்டது. 

மார்ச் 16 அன்று பிறந்த குழந்தை கைவிடப்பட்டு சாலையோரத்தில் கிடந்தது. அந்த சம்பவத்தை முன்னிட்டு இந்த கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. 

அந்தக் குழந்தையின் தாயைக் கண்டுபிடித்து விசாரணை செய்ததில் குழந்தையின் தந்தை பிரகாசன் என்பது தெரிய வந்துள்ளது. 10 மாதங்களுக்கு முன் சிபிஎம் அலுவலகத்திற்குள் அந்தப் பெண் வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிய வந்தது. 

பாதிக்கப்பட்ட பெண் மார்ச் 21 அன்று பிரகாசன் மீது வழக்கு  பதிவு செய்தார். கல்லூரி ஆண்டு மலருக்குக்கான வேலையில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவனும் சிறுபுலசேரியில் தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். 

அந்தப் பெண்ணின் மீது குழந்தையைக் கைவிட்டதற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். 

More News