This Article is From Apr 01, 2020

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-யை தாண்டியது!!

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் இந்தியா இன்னும் கொரோனா பரவலின் 2-வது கட்டத்தில்தான் இருப்பதாகவும், சமூக பரவல் நிலைக்கு இன்னும் செல்லவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  300-யை தாண்டியது!!

கொரோனா ஊரடங்குக்கு இடையே, வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை பராமரிப்பது என்பது அரசுக்கு முக்கிய சவாலாக உள்ளது.

ஹைலைட்ஸ்

  • நாட்டில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது
  • மகாராஷ்டிராவில் 302 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • பொருளாதார சிக்கலை சரி செய்ய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு
New Delhi:

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 302 – யை தாண்டியுள்ளது. ஒரே நாளில் மட்டும் இங்கு 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மும்பையை சேர்ந்தவர்கள் மட்டும் 59 பேர்.

தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை அறிவிக்கத் தொடங்கியதால் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களாக தனியார் ஆய்வகங்கள் மும்பையில் செயல்பட்டு வருகின்றன.

நேற்றைய தினப்படி மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது. மொத்தம் 40 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருளாதார இழப்பை சரி செய்யும் வகையில் மகாராஷ்டிராவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் கீழ் செயல்படும் ஊழியர்களுக்கு 60 சதவீதம் சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது. இருப்பினும், அடிப்படை தேவைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த சம்பள பிடித்தம் பொருந்தாது என்று மகாராஷ்டிர அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தப்லீக் ஜமாத்தின் தலைமை அலுவலகமாக டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் இருந்தவர்களில் 300-க்கும் அதிகமானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1200 பேர் டெல்லியின் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்கிருந்து அசாம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்குக்கு இடையே, வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை பராமரிப்பது என்பது அரசுக்கு முக்கிய சவாலாக உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் 6 லட்சம் தொழிலாளர்களுக்காக 21 ஆயிரம் தங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக 23 லட்சம் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியது.

.