பாஜக MLA வேட்பாளருக்கு சரமாரியாக அடி – உதை! வைரலாகும் வீடியோ!!

முந்தைய மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர்.

பாஜக வேட்பாளர் ஜெய் பிரகாஷ் தாக்கப்படும் காட்சி.

Kolkata:

மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள கரிம்கஞ்ச் தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாஜக தலைவர் ஜெய் பிரகாஷ் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. கலியாகஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ பர்மதாநாத் ராய் காலமானார். இதேபோன்று காரக்பூர் மற்றும் கரிம்கஞ்ச் தொகுதிகளில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த 3 தொகுதிகளும் காலியானது. இந்த தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் கரிம்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜெய் பிரகாஷ் நிறுத்தப்பட்டிருந்தார். வாக்குச்சாவடி மேற்பார்வையின்போது எதிர்க்கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிந்தது.

இதில் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் மஜும்தார் மாற்று கட்சி தொண்டர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Newsbeep

.

k2uhbss

தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களே காரணம் என்று ஜெய் பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள பாஜக மூத்த தலைவர் முகுல் ராய், 50 திரிணாமூல் காங்கிரஸ் ரவுடிகள் தங்களது வேட்பாளரை தாக்கியதாகவும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முந்தைய மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர்.