குடித்துவிட்டு ஜட்ஜ் சீட்டில் அமர்ந்து கும்மாளம் அடித்த போலீஸ் ட்ரெய்னி!

மத்திய பிரதேசத்தில் போலீஸ் ட்ரெய்னியாக இருக்கும் ஒரு நபர், நீதிபதி இல்லாத நேரத்தில் சீட்டில் அமர்ந்து செல்ஃபி எடுத்து கும்மாளம் அடித்துள்ளார்.

குடித்துவிட்டு ஜட்ஜ் சீட்டில் அமர்ந்து கும்மாளம் அடித்த போலீஸ் ட்ரெய்னி!

ஹைலைட்ஸ்

  • ம.பி உமாரியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது
  • போலீஸ் ட்ரெய்னியின் பெயர் ராம் அவதார் ராவத்
  • ராவத் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
Umaria, Madhya Pradesh:

மத்திய பிரதேசத்தில் போலீஸ் ட்ரெய்னியாக இருக்கும் ஒரு நபர், நீதிபதி இல்லாத நேரத்தில் சீட்டில் அமர்ந்து செல்ஃபி எடுத்து கும்மாளம் அடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உமாரியாவில் போலீஸ் ட்ரெய்னியாக இருப்பவர் 28 வயதாகும் ராம் அவதார் ராவத். அவர் உமாரியாவில் இருக்கும் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றுக்குச் மது போதையில் இருந்த போது சென்றுள்ளார். அங்கே நீதிபதி நாற்காலியில் யாரும் இல்லை என்பதைப் பார்த்துள்ளார். இதையடுத்து, அந்த சீட்டில் அமர்ந்து செல்ஃபிக்களை க்ளிக் செய்ய ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து அவர் இப்படி செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, நீதிமன்ற வளாகத்தல் இருந்து ஓரிருவரும் அவரைப் பார்க்கவில்லை. 

ஆனால் சக்தி சிங் என்கின்ற நீதிமன்ற பணியாளர் ராவத், நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துள்ளார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார் ராவத். ஆனால் சிங், ராவத்தை கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார் ராவத். 

More News