காஷ்மீரில் 5 காவலர்களின் குடும்பத்தினரை தீவிரவாதிகள் கடுத்தியதாக தகவல்..!

தெற்கு காஷ்மீரில் சமீபத்தில் போலீஸ், தீவிரவாதிகளின் வீடுகளில் சோதனையிட்டு அவர்களின் சில உறவினர்களை கைது செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
காஷ்மீரில் 5 காவலர்களின் குடும்பத்தினரை தீவிரவாதிகள் கடுத்தியதாக தகவல்..!
Srinagar: 

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள், காவலர்களின் வீட்டை சோதனையிட்டதாகவும், 5 காவலர்களின் வீட்டிலிருந்து குடும்பத்தினரை கடத்திச் சென்றதாகவம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

தெற்கு காஷ்மீரில் சமீபத்தில் போலீஸ், தீவிரவாதிகளின் வீடுகளில் சோதனையிட்டு அவர்களின் சில உறவினர்களை கைது செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தீவிரவாதிகளும் போலீஸாரின் குடும்பத்தினரை கடத்தியுள்ளனர். இதுவரை 5 காவலர்களின் 9 குடும்ப உறுப்பினர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று, புல்வாமா மாவட்டத்தில் ஒரு காவலர் தீவிரவாதிகளால் கடுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து புல்வாமா, அனாந்தங், குல்கம் மாவட்டங்களில் தீவிரவாதிகள் சோதனையிட்டு போலீஸாரின் உறவினர்களை கடத்திச் சென்றுள்ளனர். 

இதையடுத்து கடத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறுவினர்களை விடுவித்துவிடுமாறு வீடியோ மூலம் தீவிரவாதிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வீடியோ ஜம்மூ- காஷ்மீரில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, ‘கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்புக்காகவும் விடுவிப்புக்காகவும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார். 

கடத்தல் சம்பவத்தை அடுத்து, மக்கள் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். மேலும், இரண்டு தீவிரவாதிகளின் வீடுகளையும் கொளுத்தினர். கடந்த 28 ஆண்டுகளில் முதன்முறையாக காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை, தீவிரவாதிகள் கடத்தும் சம்பவம் இப்போதுதான் முதன்முறையாக நடந்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................