This Article is From Nov 21, 2018

அழக்கூட தெம்பில்லாத ஏமன் சிறுவன்: மக்களை கலங்க வைத்த காஸியின் புகைப்படம்!

ஏமனில் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. 10 வயதான காஸி சலே எனும் சிறுவன் தென்மேற்கு ஏமன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அழக்கூட தெம்பில்லாத ஏமன் சிறுவன்: மக்களை கலங்க வைத்த காஸியின் புகைப்படம்!

22 மில்லியன் மக்களுக்கு மனித உதவி தேவைபடும் சூழலில் ஏமன் உள்ளது. 45 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை இழந்துள்ளனர்.

Taez, Yemen:

ஏமனில் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. 10 வயதான காஸி சலே எனும் சிறுவன் தென்மேற்கு ஏமன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுடைய எடை 8 கிலோவாக குறைந்துள்ளது. அவனது உடல் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது. அந்த சிறுவனால் தன்னுடைய சக்தியை திரட்டி அழக்கூட முடியாத நிலையிலிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. அது பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இதேபோல் 1.4 கோடி ஏமன் மக்கள் பஞ்சத்தால் அவதிக்குள்ளாகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக ஏமன் நாடு போரில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பஞ்சத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அல் - முதாஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காஸிக்கு சிகிச்சையளிக்கும் எமன் அலி எனும் செவிலியர் இது குறித்து கூறும் போது ''காஸி ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவர் உணவு எடுத்துக்கொண்டு மிக நீண்ட நாட்கள் ஆகியுள்ளது. இங்குள்ள பல குழந்தைகளின் எடையை சோதித்தால் அவர்களின் ஊட்டச்சத்து மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் ஸ்வீடனில் அமைதிப்பேச்சுவார்த்தைக் குறித்து பேசி வருகின்றனர். ஆனால் கள நிலவரம் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

யுனிசெஃப் தகவலின்படி ஏமனில் உள்ள 1.4 கோடி மக்களில் 50% அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிக்குள்ளாகின்றனர் என்று கூறப்படுகிறது. 

22 மில்லியன் மக்களுக்கு மனித உதவி தேவைப்படும் சூழலில் ஏமன் உள்ளது. 45 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை இழந்துள்ளனர். ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளது என்ற பரிதாபமான நிலையில் ஏமன் உள்ளது. 

அல் - முதாஃபர் மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் சோனா கூறும்போது ''இது போன்று பலரை நாங்கள் தினமும் சந்திக்கிறோம். சிலர் மிகவும் மோசமான சூழலில் உள்ளனர். காஸியின் நிலை மிக மிக மோசமானது. இதுதான் இந்த நாட்டின் நிலையும் கூட" என்றார்.

.