காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலிழக்க செய்த இந்திய ராணுவம்! வைரலாகும் Photos!!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக தீவிரவாதிகள் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலிழக்க செய்த இந்திய ராணுவம்! வைரலாகும் Photos!!

வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினர்.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தின் இந்த துணிச்சல் மிக்க செயலை பலரும் பாராட்டியுள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை எண் 11-ல் குட்வானி என்ற பாலம் அமைந்துள்ளது. இதன் அருகே தீவிரவாதிகள் வெடிகுண்டை வைத்திருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவத்தினர், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். 
 

.

83c93ed


முன்னதாக, வெடிகுண்டு வைக்கப்பட்ட இடம் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். 
.

ml5hs0to


மிகவும் ரிஸ்க்கான வேலை என்பதால், நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார்கள். ஆய்வு செய்யப்பட்டதில் வெடிகுண்டு 25 கிலோ எடை கொண்டது என்றும், அது வெடித்தால் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பத்திரமாக அதனை எடுத்த ராணுவத்தினர், செயலிழக்கம் செய்வதற்காக வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றனர். 
.

cdsu5304

இதன்பின்னர் வனப்பகுதிக்குள் வைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் வெடிகுண்டு செயலிழக்கம் செய்யப்பட்டது. உயிரைப் பணயம் வைத்து ராணுவத்தினர் மேற்கொண்ட இந்தப் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது அங்கு சுமார் 70 ஆண்டுகளாக அமலில் இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதற்கு முன்னெச்சரிக்கையாக அங்குள்ள முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 

சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தில் காஷ்மீரில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த பகுதி, காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு துணை நிலை கவர்னர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

With input from ANI

More News