ஆரே விவகாரம்: மும்பைக்காரர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதா? கொதித்த ஆதித்யா தாக்கரே!

இதுதொடர்பாக தொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில், மரங்களை வெட்டுவது, வெட்கக்கேடான மற்றும் அருவருப்பான செயல். மேலும், அதனை இரவு நேரத்தில் மறைத்து நடத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஆரே காலனி விவகாரத்தை ’ஈகோ தகராறு’ என்று விமர்சித்து வருகிறார் (File)


Mumbai: 


மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக ஆர்வலளர்களுக்கு சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில், மரங்களை வெட்டுவது, வெட்கக்கேடான மற்றும் அருவருப்பான செயல். மேலும், அதனை இரவு நேரத்தில் மறைத்து நடத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

மும்பை மெட்ரோ, ஆரேயில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நயவஞ்சகமாக தடுத்து நிறுத்துவது வெட்கக்கேடானது மற்றும் அருவருப்பானது. இந்த அதிகாரிகளை பாகிஸ்தான் எல்லைக்கோட்டில் நிறுத்தி வைத்து மரங்களை அழிப்பதற்கு பதிலாக பயங்கரவாத முகாம்களை அழிக்க உத்தரவிட்டால் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

"பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அருகிலுள்ள பல உள்ளூர் சிவசேனா உறுப்பினர்கள் கூட இதைத் தடுக்க முயன்றனர். எனினும், போலீஸை குவித்து, காடுகளை அழித்து வருகிறது. மும்பை மெட்ரோ, ஐ.நாவில் இந்தியா சொன்ன அனைத்தையும் அழித்து வருகிறது" என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ள சிவசனே, ஆரே காலனி விவகாரத்தை 'ஈகோ தகராறு' என்று விமர்சித்து வருகிறது. 

பெரும் அளவிலாக போலீசாரை குவித்து, நீதிமன்றம் அனுமதி பெற்றும் இரவோடு இரவாக, அமைதியாக நடந்து வந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தி, இந்த மரங்களை அகற்றுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினர். 

ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக நேற்று இரவு முதல் மும்பையின் பல சமூக ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக மரங்களை வெட்டும் பணியில் நள்ளளிரவில் அரசு தீவிரமாக இரங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். 

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஆரே காலனிக்கு வெளியிலே சில போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் போலீசாரால் காலனிக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இரவோடு இரவாக மரங்களை வெட்டுவதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கோரேகாவில் உள்ள ஆரே காலனி மும்பை பெருநகரின் பசுமை நுரையீரலாக உள்ளது. இங்கு மூன்றாவது மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது.

இதற்கு பிரபலங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரி தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் நான்கு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையில் நேற்று, ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க முடியாது என்றும், மரங்களை வெட்ட மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மாநகராட்சி அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் அந்த நான்கு மனுக்களையும் நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஆரே காலணியில் மரம் வெட்டும் பணிகளில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.  இதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான இரவிலே குவிய தொடங்கினர். 

தொடர்ந்து, அவர்கள் அனைவரும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டாலும் ஆரே காலனிக்கு வெளியில் அமர்ந்து இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................