This Article is From Mar 26, 2019

'தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதலை இந்தியா நடத்தலாம்' : இம்ரான் கான்

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் போர் மேகங்கள் ஓயவில்லை என்று கூறியுள்ள இம்ரான கான், மோடி நிர்வாகம் மீண்டும் ஒரு தாக்குதலை தேர்தலுக்கு முன்பு நடத்தலாம் என்று கூறியுள்ளார்.

'தேர்தலுக்கு முன்பு இன்னொரு தாக்குதலை இந்தியா நடத்தலாம்' : இம்ரான் கான்

இந்தியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

Islamabad:

தேர்தலுக்கு முன்பு இந்தியா இன்னொரு தாக்குதலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் 14-ம்தேதியில் இருந்து பதற்றம் காணப்படுகிறது. அன்றைய தினம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவத்தினரை கொன்று குவித்தது. 

இந்த அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது என்பதால் அதன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 26-ம்தேதி இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை சிதைத்தது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக அந்நாட்டின் பிரபல நாளிதழான டானில் கூறப்பட்டுள்ளதாவது-

நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. இந்தியாவில் தேர்தலை முடியும் வரை நம்மை சூழ்ந்துள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி நிர்வாகம் (மத்திய அரசு) நம்மீது தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து விதங்களிலும் நாம் தயாராக இருக்கிறோம். 


இவ்வாறு இம்ரான் கான் கூறியுள்ளார். 
 

.