''பாகிஸ்தான் பிரதமர் 'பிச்சை' எடுக்கிறார்'' விமர்சிக்கும் சிந்து முதலமைச்சர்

கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நிதிநெருக்கடியை சமாளிக்க 6.2 பில்லியன் டாலர் வழங்கவிருப்பதாக முடிவெடுத்தது.

''பாகிஸ்தான் பிரதமர் 'பிச்சை' எடுக்கிறார்'' விமர்சிக்கும் சிந்து முதலமைச்சர்

ஆண்டுக்கு எண்ணெய் இறக்குமதிக்கு செலவழிக்கும் 12 பில்லியன் டாலர் தொகையில், இது 60 சதவிகிதமாகும்.

Badin, Pakistan:

சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் முராட் அலி ஷா பிரசாரத்தின் போது, "நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிநிலை நெருக்கடியை சரிசெய்ய பிரதமர் இம்ரான்கான் நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கிறார்" என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான ஷா ''இம்ரான்கான் நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கிறார்'' என்று சமா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறினார். 

மேலும், "இம்ரான்கான் எந்த முன் அனுபவமும் இல்லாமல் அரசியலில் இறங்கி பிரதமரானவர்" என்றார். கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நிதிநெருக்கடியை சமாளிக்க 6.2 பில்லியன் டாலர் வழங்கவிருப்பதாக முடிவெடுத்தது. இந்த அறிவிப்பு இளவரசர் முகமது பின் சையத் அக் நஹ்யானால் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிற‌து. அவர் சென்ற வாரம் பாகிஸ்தான் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 6.2 பில்லியன் டாலரை 3.2 பில்லியன் டலர் எண்ணெய் வர்த்தகத்தில் குறைத்துக்கொண்டும், 3 பில்லியன் டாலரை கையிருப்பாகவும் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsbeep

அக்டோபர் மாதம் உறுதி செய்யப்பட்ட நிதி உதவி அளவை ஒத்தது தான் இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு 7.9 பில்லியன் டாலர் மிச்சமாகும். ஆண்டுக்கு எண்ணெய் இறக்குமதிக்கு செலவழிக்கும் 12 பில்லியன் டாலர் தொகையில், இது 60 சதவிகிதமாகும்.

பாகிஸ்தான், கத்தாருடனும் இயற்கை எரிவாயுவின் விலையில் சலுகைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.