This Article is From Nov 11, 2019

சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!

சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி நவ.8ஆம் தேதியன்று தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையல் கிடந்துள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!

கடந்த டிச.2018 முதல் தற்போது வரை இது சென்னை ஐஐடியில் நடந்த 5வது தற்கொலை சம்பவமாகும்.

Chennai:

சென்னை ஐஐடி மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவி தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இது தற்கொலை தான் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தற்கொலை குறித்து எந்த கடிதமும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். 

மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி நவ.8ஆம் தேதியன்று உயிரிழந்தார் என்பதை ஆழந்த வருந்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இழப்பு குடும்பத்தினருக்கும், கல்லூரிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த டிச.2018 முதல் தற்போது வரை இது சென்னை ஐஐடியில் நடந்த 5வது தற்கொலை சம்பவமாகும். 

கடந்த செப்.22ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பொறியியல் இறுதி ஆண்டு மாணவர் சாஹல் கோர்மாத் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த முதலாமாண்டு எம்.டெக் மாணவர் கோபால் பாபு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். 

ஜார்கண்டை சேர்ந்த பிஎச்.டி மாணவி ரன்ஜனா குமாரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிச.2018ல் அதிதி சிம்ஹா என்ற உதவி பேராசிரியர் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டார். 

.