This Article is From Feb 21, 2020

கழிவறையில் மாணவியைப் படம் பிடிக்க முயன்ற ஊழியர்..!?- மெட்ராஸ் ஐஐடியில் வெடிக்கும் சர்ச்சை

புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, ஐஐடி-க்குச் சென்ற காவல் துறை, சம்பந்தப்பட்ட ஊழியரைக் கைது செய்துள்ளது. 

கழிவறையில் மாணவியைப் படம் பிடிக்க முயன்ற ஊழியர்..!?- மெட்ராஸ் ஐஐடியில் வெடிக்கும் சர்ச்சை

அதே நேரத்தில், கைது செய்யப்பட்ட ஊழியரின் செல்போனில் எந்தவித வீடியோவும் இல்லை.

Chennai:

ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், அதே நிறுவனத்தில் முனைவர் ஆய்வு படிப்புப் பயின்று வந்த மாணவியை, கழிவறையில் படம் பிடிக்க முயன்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலீஸ் கொடுக்கும் தகவல்படி, “கழிவறையில் ஒரு ஓட்டை இருப்பதை சம்பந்தப்பட்ட மாணவி பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து ஓட்டைக்கு மறுபக்கம் சென்று பார்த்துள்ளார். அங்கு ஏரோஸ்பேஸ் துறையைச் சேர்ந்த ப்ராஜெக்ட் அதிகாரி இருப்பதைப் பார்த்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அவர் காவல் துறையில் புகார் பதிவு செய்தார்,” என்று தெரிவித்துள்ளது.

புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, ஐஐடி-க்குச் சென்ற காவல் துறை, சம்பந்தப்பட்ட ஊழியரைக் கைது செய்துள்ளது. 

அதே நேரத்தில், கைது செய்யப்பட்ட ஊழியரின் செல்போனில் எந்தவித வீடியோவும் இல்லை. அதை மேலும் ஆய்வு செய்ய தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளது போலீஸ். இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

.