This Article is From Nov 20, 2019

50-வது சர்வதேச திரைப்பட திருவிழாவை தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்!!

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா அரசு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவை நடத்துகின்றன. தற்போது நடைபெறவிருப்பது 50-வது திருவிழா ஆகும். இதற்காக ரூ. 40 கோடி வரைக்கும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

50-வது சர்வதேச திரைப்பட திருவிழாவை தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்!!

அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த்.

ஹைலைட்ஸ்

  • பிரபல இயக்குனர் கரன் ஜோகர் இன்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்
  • 76 நாடுகளை சேர்ந்த 200 படங்கள் திரையிடப்பட உள்ளன
  • முதல்நாளான இன்று இத்தாலிய திரைப்படத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது.
Panaji:

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்படத் திருவிழாவை நடிகர் ரஜினிகாந்த்  மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.  இந்தியா நடத்தும் சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் இன்று தொடங்குகிறது. 

இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பதிவு செய்துள்ளனர். 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் இந்த திருவிழாவில் திரையிடப்படுகின்றன. 

தொடக்க நாளான இன்று இத்தாலிய திரைப்படம் Despite The Fog திரையிடப்பட உள்ளது. இதனை கோரன் பஸ்கல்ஜெவிக் இயக்கியுள்ளார். நவம்பர் 28-ம்தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் ஈரான் இயக்குனர் மொஹ்சின் மக்மல்பாவின் Marghe and her Mother திரைப்படம் இறுதியாக திரையிடப்படுகிறது. 

தொடக்க நாளான இன்று, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செயலர் அமித் காரே, கோவால் முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா அரசு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவை நடத்துகின்றன. தற்போது நடைபெறவிருப்பது 50-வது திருவிழா ஆகும். இதற்காக ரூ. 40 கோடி வரைக்கும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தாண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது ரஜினிகாந்துடன், பிரான்ஸ் நடிகை இஸ்பெல்லா ஹப்பெர்ட்டுக்கும் இன்று வழங்கப்பட உள்ளது. இஸ்பெல்லா 120-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

.