வங்கத்தில் இருக்க வேண்டும் என்றால் வங்காள மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் - மம்தா

தமிழகத்திற்கு சென்றால், தமக்கு தமிழ் மொழி பேச தெரியாது என்றாலும், சில தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பேச முயற்சிப்பேன்

 Share
EMAIL
PRINT
COMMENTS
வங்கத்தில் இருக்க வேண்டும் என்றால் வங்காள மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் - மம்தா

அரசியல் தலைவர்கள் இனி வங்க மொழியில் தான் பேச வேண்டும்


Kolkata: 

மேற்கு வங்கத்தில் வசிப்பவர்களுக்கு கட்டாயமாக வங்கமொழி தெரிந்திருப்பது அவசியம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நிலவி வரும் குழப்பங்கள் அனைத்திற்கும் காரணம் பாஜக என குற்றம்சாட்டியுள்ளார், குஜராத்தை போல் மேற்குவங்கத்தை மாற்ற அனுமதிக்க மாட்டேன் என கூறினார். அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் இனி வங்க மொழியில் தான் பேச வேண்டும் என தெரிவித்தார். 

தான் பீகார்,  உத்திரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு சென்றால் அந்த மாநிலத்தின் தாய் மொழியில்தான் பேசுவேன், என்றும், அத்துடன் தமிழகத்திற்கு சென்றால், தமக்கு தமிழ் மொழி பேச தெரியாது என்றாலும், சில தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பேச முயற்சிப்பேன் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அம்மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் குழுவினரை சந்தித்த மம்தா பேனர்ஜி, அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................