இறைச்சி சாப்பிட்டால் காட்டுமிராண்டிகளாகி விடுவீர்கள்”: பாஜக எம்.பி விமர்சனம்

குழந்தைகளின் உணவின் ஒரு பகுதியாக முட்டைகளை வழங்கும் யோசனையை மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேவி முன்வைத்தார். முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்து காரணமாக இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான உணவில் முட்டை சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

New Delhi:

இறைச்சியை உட்கொள்ளும் குழந்தைகள் காட்டுமிராண்டிகளாக வளரக்கூடும் என்று மத்திய பிரதேச பாஜக தலைவர் கோபால் பார்கவா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கான உணவில் முட்டை சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

கட்சியின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா விமர்சித்தையடுத்து கோபால் பார்கவா “இந்த செயல் மக்களின் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக” விவரித்தது. முதலமைச்சர் கமல்நாத்தின் தலைமையிலான காங்கிரஸ் அரசை விமர்சித்தார். குழந்தைகள் முட்டை மற்றும் இறைச்சி சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

“இந்த அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? குழந்தைகளுக்கு முட்டை கொடுங்கள்… சாப்பிடாதவர்களை கட்டாயப்படுத்துங்கள். அவர்கள் அதை சாப்பிடாவிட்டால், கோழி, மட்டன் ஆகியவற்றை உண்பார்கள். இந்திய கலாச்சாரத்தில் இறைச்சி சாப்பிடுவது அனுமதிக்கப்படவில்லை. இதை சிறுவயதிலிருந்தே சாப்பிட்டால் வளரும்போது காட்டுமிராண்டிகளாக மாறலாம் என்று கோபால் பார்கவா கூறினார்.

பாஜக தலைவர் தனது சமூகத்தின் படி பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிடுவதை தவிர்த்தார்.

குழந்தைகளின் உணவின் ஒரு பகுதியாக முட்டைகளை வழங்கும் யோசனையை மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேவி முன்வைத்தார். முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்து காரணமாக இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த முன்மொழியப்பட்ட யோசனை பாஜகவின் கோபத்தை உண்டாக்கியுள்ளது. 

“இது போன்ற எந்த திட்டத்தையும் நாங்கள் எதிர்ப்போம். இது மக்களின் மத நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில் தலையிடும் முயற்சி என்று நான் நினைக்கிறேன்” என்று கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார். “பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் முட்டையை தொடுவது கூட இல்லை”என்று தெரிவித்தார். 

பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேவி கூறியுள்ளார். “பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்ல ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருக்கும் தொகுதிகளில் நாங்கள் சேவையை வழங்குவோம். முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டையினால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நான் கூட முட்டை சாப்பிடுகிறேன்” என்று அவர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் தெரிவித்துள்ளார்.

More News