‘’வி.ஏ.ஓ. ஆபிஸ்ல இல்லன்னா சஸ்பெண்ட்தான்’’ – நெல்லை கலெக்டர் அதிரடி; வைரலாகும் ஆடியோ!!

தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்ததன் மூலம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்தான் இந்த நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர்

‘’வி.ஏ.ஓ. ஆபிஸ்ல இல்லன்னா சஸ்பெண்ட்தான்’’ – நெல்லை கலெக்டர் அதிரடி; வைரலாகும் ஆடியோ!!

தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்ததன் மூலம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் இந்த ஷில்பா

ஹைலைட்ஸ்

  • மகளை அங்கன்வாடியில் சேர்த்தவர் இந்த கலெக்டர்
  • விவசாய உதவித் தொகையை பெறுவதில் 2 முதியோர் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்
  • கலெக்டர் ஷில்பாவின் ஆடியோ வைரலாகி வருகிறது

விவசாயிகள் உதவித் தொகையை பெறுவதற்காக வந்த முதியோர்களை அலைக்கழித்த வி.ஏ.ஓ.வை நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் எச்சரித்துள்ளார். ஆய்வுக்கு வரும்போது சம்பந்தப்பட்ட விஏஓக்கள் பணியில் இல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகள் உதவித் தொகையை பெறுவதற்காக 2 வயதானவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளனர். அவர்களை விசாரித்த கலெக்டர் ஷில்பா, இருவரையும் அலைக்கழித்த வி.ஏ.ஓ.வை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவரிடம் நெல்லை கலெக்டர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் கலெக்டர் ஷில்பா கூறியதாவது-

குட்மார்னிங். கலெக்டர் ஆபிஸ்ல விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகையை பெறுவதற்காக நெறய அப்ளிகேஷன் வந்துட்டுஇருக்கு. ரெண்டு வயசானவங்க வந்து இங்க மனு கொடுக்குறாங்க. கேட்டா வி.ஏ.ஓ. ஆபிஸ்ல போனா அங்க வி.ஏ.ஓ. ரெண்டு நாளானு இல்லனு சொல்றாங்க.  வி.ஏ.ஓ.க்கள் எல்லாரும் அவங்க ஊர்ல இருக்குறவங்களோட விண்ணப்பங்களை சேகரிக்கணும்.

இது ரொம்ப சீரியஸான விஷயம். அலட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வளவு வயசா இருக்குறவங்க என்னத் தேடி வந்து மனு தர்றாங்க. ஃபார்ம்ல வி.ஏ.ஓ. எல்லாம் ஃபில் அப் பண்ணிருக்காங்க. ஆனா மனு வாங்காமலே விட்ருக்காங்க. வயசானவங்க விஏஓ ஆபிஸ், ஆர்.ஏ. ஆபிஸ், தாலுகா ஆபிஸ் போய்ட்டு கடைசியா இங்க (கலெக்டர் ஆபிசுக்கு) வந்திருக்காங்க. மினிமம் அந்தம்மாவுக்கு 80 வயசாச்சும் இருக்கும்.

இந்த சின்ன வேலைய கூட பண்ண முடியலினா யாரோட வேலைலயும் எனக்கு திருப்தி இல்ல. விஏஓ எல்லாரும் வேலை நேரத்துல ஆபிஸ்ல இருக்கணும். நான் ஆய்வுக்காக கிராமங்களுக்கு செல்வேன். அப்போது அலுவலகத்தில் இல்லாவிட்டால் அந்த விஏஓ-வை அந்த இடத்திலேயே சஸ்பெண்ட் செய்து விடுவேன்.

இவ்வாறு நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியுள்ளார். அவரது ஆடியோ வைரலாகி வருகிறது. இவர் தன் மகளை அங்கன்வாடியில் சேர்த்ததன் மூலம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்.

More News